TNPSC Thervupettagam

PMJDY திட்டத்தின் 10 ஆண்டுகள்

September 3 , 2024 39 days 93 0
  • 2024 ஆம் ஆண்டு பிரதான் மந்திரி ஜன்-தன் யோஜனாவின் (PMJDY) பத்தாவது நிறைவு ஆண்டைக் குறிக்கிறது.
  • இத்திட்டத்தின் கீழ், எவரும் அடிப்படை சேமிப்பு வங்கி வைப்பு (BSBD) கணக்கை எந்த வங்கிக் கிளையிலும் அல்லது வணிக நிருபர் (வங்கி மித்ரா) கடையிலும் திறக்கலாம்.
  • 2024 ஆகஸ்ட் 14 நிலவரப்படி, சுமார் 53.14 கோடி வங்கி கணக்கு பயனாளிகள் உள்ளனர்.
  • இந்தக் கணக்குகளில் 66.6% கிராமப்புற மற்றும் வளரும் நகர்ப்புறங்களில் உள்ளன என்பதோடு அனைத்துக் கணக்குகளிலும் 55.6% அளவைப் பெண்கள் கொண்டுள்ளனர்.
  • இந்தக் கணக்குகள் இப்போது மொத்தம் ரூ.2.31 லட்சம் கோடி வைப்புத்தொகைகளை கொண்டுள்ள நிலையில் இது கடந்த எட்டு ஆண்டுகளில் 15 மடங்கு உயர்வைப் பிரதிபலிக்கிறது.
  • சுமார் 8.4% கணக்குகள் சுழிய இருப்புகளையும்  மற்றும் தோராயமாக 20% கணக்குகள் செயலற்ற நிலையிலும் உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்