2024 ஆம் ஆண்டு பிரதான் மந்திரி ஜன்-தன் யோஜனாவின் (PMJDY) பத்தாவது நிறைவு ஆண்டைக் குறிக்கிறது.
இத்திட்டத்தின் கீழ், எவரும் அடிப்படை சேமிப்பு வங்கி வைப்பு (BSBD) கணக்கை எந்த வங்கிக் கிளையிலும் அல்லது வணிக நிருபர் (வங்கி மித்ரா) கடையிலும் திறக்கலாம்.
2024 ஆகஸ்ட் 14 நிலவரப்படி, சுமார் 53.14 கோடி வங்கி கணக்கு பயனாளிகள் உள்ளனர்.
இந்தக் கணக்குகளில் 66.6% கிராமப்புற மற்றும் வளரும் நகர்ப்புறங்களில் உள்ளன என்பதோடு அனைத்துக் கணக்குகளிலும் 55.6% அளவைப் பெண்கள் கொண்டுள்ளனர்.
இந்தக் கணக்குகள் இப்போது மொத்தம் ரூ.2.31 லட்சம் கோடி வைப்புத்தொகைகளை கொண்டுள்ள நிலையில் இது கடந்த எட்டு ஆண்டுகளில் 15 மடங்கு உயர்வைப் பிரதிபலிக்கிறது.
சுமார் 8.4% கணக்குகள் சுழிய இருப்புகளையும் மற்றும் தோராயமாக 20% கணக்குகள் செயலற்ற நிலையிலும் உள்ளன.