TNPSC Thervupettagam

PMKisan Bhai (பண்டாரன் ஊக்கத்தொகை) திட்டம்

November 18 , 2023 246 days 191 0
  • இத்திட்டம், அறுவடைக்குப் பிந்தைய காலகட்டத்தில் குறைந்தபட்சம் மூன்று மாதங்களுக்கு தங்கள் விளைபொருட்களைத் பாதுகாத்து தக்க வைத்துக் கொள்வதற்காக விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இது அவர்களின் பயிர்களை எப்போது, எங்கு விற்க வேண்டும் என்பதைத் தீர்மானிப்பதற்கான சுய அதிகாரத்தினை அவர்களுக்கு வழங்குகிறது.
  • இது பயிர்களுக்கான விலையினை நிர்ணயம் செய்வதில் வியாபாரிகளின் ஏகாதிபத்தியத்தினை உடைக்க முயல்வதோடு, விவசாயிகளுக்கு அவர்களின் விளைபொருட்களின் மீது அதிக கட்டுப்பாட்டை அளிக்கிறது.
  • சேமிப்பு ஊக்கத் தொகையானது, அதிகபட்சமாக மூன்று மாதங்களுக்கு வழங்கப் படும்.
  • அதோடு, 15 நாட்கள் அல்லது அதற்கும் குறைவாக சேமித்து வைக்கப்படும் விளைபொருட்கள் மானியம் பெற தகுதியற்றது.
  • ஆந்திரப் பிரதேசம், அசாம், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, ராஜஸ்தான், தமிழ்நாடு, மற்றும் உத்தரப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் இந்தத் திட்டம் சோதனை முறையில் செயல்படுத்தப்பட உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்