PMKSY திட்டத்தின் நீர்பிடிப்புப் பகுதி மேம்பாட்டுத் திட்டம் 2.0
January 19 , 2025 8 days 59 0
ஊரக மேம்பாட்டு அமைச்சகத்தின் (MoRD) நில வளத் துறை (DoLR) ஆனது பிரதான் மந்திரி கிருஷி சிஞ்சாயி யோஜனா (WDC-PMKSY) திட்டத்தின் நீர்பிடிப்புப் பகுதி மேம்பாட்டுத் திட்டங்களை அமல்படுத்துகிறது.
ஒருங்கிணைந்த அணுகுமுறையில் நீர்பிடிப்புப் பகுதி மேம்பாட்டுத் திட்டங்களை மேற்கொள்வதன் மூலம், நாட்டின் தரமிழந்த மற்றும் மழைநீர் பிடிப்பு/மானாவாரி பகுதிகளை மேம்படுத்துவதே இதன் நோக்கமாகும்.
PMKSY-WDC 2.0 திட்டத்தின் கீழ், சிறப்பாகச் செயல்படும் 10 மாநிலங்களில் 700 கோடி ரூபாய் செலவில் 56 புதிய நீர்பிடிப்புப் பகுதி மேம்பாட்டுத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.
இதில் இராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், கர்நாடகா, ஒடிசா, தமிழ்நாடு, அசாம், நாகாலாந்து, இமாச்சலப் பிரதேசம், உத்தரகாண்ட் மற்றும் சிக்கிம் ஆகிய மாநிலங்கள் அடங்கும்.