பீகாரில் அதிக எண்ணிக்கையிலான பிரதான் மந்திரி முத்ரா யோஜனா (PMMY) பெண் தொழில்முனைவோர் (4.2 கோடி) உள்ளனர் என்ற ஒரு நிலையில் அதைத் தொடர்ந்து தமிழ்நாடு (4.0 கோடி) மற்றும் மேற்கு வங்காளம் (3.7 கோடி) ஆகிய மாநிலங்கள் இடம் பெற்றுள்ளன.
மகாராஷ்டிராவில் வங்கிக் கணக்குகள் வைத்துள்ள மொத்த நபர்களில் பெண்களின் பங்கு (79 சதவீதம்) அதிகமாக உள்ளது, அதைத் தொடர்ந்து ஜார்க்கண்ட் (75 சதவீதம்) மற்றும் மேற்கு வங்காளம் (73 சதவீதம்) ஆகியவை இடம் பெற்றுள்ளன.
கடந்த ஒன்பது நிதியாண்டுகளில் (2016 முதல் 2025 ஆம் நிதியாண்டு வரை), ஒரு பெண்ணுக்கு வழங்கப் படும் PMMY தொகையானது கூட்டு வருடாந்திர வளர்ச்சி விகிதத்தில் (CAGR) 13 சதவீதம் அதிகரித்து 62,679 ரூபாயாக அதிகரித்துள்ளது.
52 கோடி PMMY கணக்குகளில் சுமார் பாதி எண்ணிக்கையானது பட்டியலிடப்பட்டச் சாதியினர் / பட்டியலிடப்பட்டப் பழங்குடியினர் மற்றும் இதரப் பிற்படுத்தப்பட்ட சமூக வகுப்பினரின் கணக்குகள் ஆகும்.
கணக்கு வைத்துள்ள மொத்த நபர்களில் 68 சதவீதம் பேர் பெண் தொழில்முனைவோர், 11 சதவீதம் பேர் சிறுபான்மைக் குழுக்களைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
PMMY ஆனது, நுண் நிறுவனங்கள் மேம்பாடு மற்றும் மறுநிதியளிப்பு நிறுவனத்தின் (MUDRA) கீழ் நுண் நிறுவனங்கள் தொடர்பான ஒரு மேம்பாடு மற்றும் மறுநிதியளிப்பு நடவடிக்கைகளுக்காக அமைக்கப்பட்டது.
PMMY உறுப்பினர்களுக்கு கடன் வழங்கும் நிறுவனங்களால் 20 லட்சம் ரூபாய் வரை சொத்துப் பிணையமில்லாத நிறுவனக் கடன் வழங்கப்படுவதை உறுதி செய்கிறது.