TNPSC Thervupettagam

PMMY பற்றிய SBI அறிக்கை

April 14 , 2025 8 days 66 0
  • பீகாரில் அதிக எண்ணிக்கையிலான பிரதான் மந்திரி முத்ரா யோஜனா (PMMY) பெண் தொழில்முனைவோர் (4.2 கோடி) உள்ளனர் என்ற ஒரு நிலையில் அதைத் தொடர்ந்து தமிழ்நாடு (4.0 கோடி) மற்றும் மேற்கு வங்காளம் (3.7 கோடி) ஆகிய மாநிலங்கள் இடம் பெற்றுள்ளன.
  • மகாராஷ்டிராவில் வங்கிக் கணக்குகள் வைத்துள்ள மொத்த நபர்களில் பெண்களின் பங்கு (79 சதவீதம்) அதிகமாக உள்ளது, அதைத் தொடர்ந்து ஜார்க்கண்ட் (75 சதவீதம்) மற்றும் மேற்கு வங்காளம் (73 சதவீதம்) ஆகியவை இடம் பெற்றுள்ளன.
  • கடந்த ஒன்பது நிதியாண்டுகளில் (2016 முதல் 2025 ஆம் நிதியாண்டு வரை), ஒரு பெண்ணுக்கு வழங்கப் படும் PMMY தொகையானது  கூட்டு வருடாந்திர வளர்ச்சி விகிதத்தில் (CAGR) 13 சதவீதம் அதிகரித்து 62,679 ரூபாயாக அதிகரித்துள்ளது.
  • 52 கோடி PMMY கணக்குகளில் சுமார் பாதி எண்ணிக்கையானது பட்டியலிடப்பட்டச் சாதியினர் / பட்டியலிடப்பட்டப் பழங்குடியினர் மற்றும் இதரப் பிற்படுத்தப்பட்ட சமூக வகுப்பினரின் கணக்குகள் ஆகும்.
  • கணக்கு வைத்துள்ள மொத்த நபர்களில் 68 சதவீதம் பேர் பெண் தொழில்முனைவோர், 11 சதவீதம் பேர் சிறுபான்மைக் குழுக்களைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
  • PMMY ஆனது, நுண் நிறுவனங்கள் மேம்பாடு மற்றும் மறுநிதியளிப்பு நிறுவனத்தின் (MUDRA) கீழ் நுண் நிறுவனங்கள் தொடர்பான ஒரு மேம்பாடு மற்றும் மறுநிதியளிப்பு நடவடிக்கைகளுக்காக அமைக்கப்பட்டது.
  • PMMY உறுப்பினர்களுக்கு கடன் வழங்கும் நிறுவனங்களால் 20 லட்சம் ரூபாய் வரை சொத்துப் பிணையமில்லாத நிறுவனக் கடன் வழங்கப்படுவதை உறுதி செய்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்