அஸ்ஸாமி மற்றும் மணிப்பூரி மொழியிலான பிரதமர் அலுவலக இணையதளத்தின் பதிப்பு (PMO - Prime Minister’s Website) அண்மையில் துவங்கப்பட்டுள்ளது.
இரு மாநில மக்களின் தொடர் வேண்டுகோளுக்கு இணங்க தற்போது அஸ்ஸாமி மற்றும் மணிப்பூரி மொழியில் அணுகிடத்தக்க வகையில் பிரதமர் அலுவலக இணையதளம் துவங்கப்பட்டுள்ளது.
தமிழ், அஸ்ஸாமி, பெங்காலி, குஜராத்தி, கன்னடா, மலையாளம், மணிப்பூரி, மராத்தி, ஒடியா, பஞ்சாபி, தெலுங்கு போன்ற 11 பிராந்திய மொழிகள் உட்பட, ஆங்கிலம் மற்றும் ஹிந்தி மொழி பதிப்புகள் சேர்ந்து மொத்தம் 13 மொழிகளின் பதிப்பில் பிரதமர் அலுவலக இணையதளம் இயங்குகின்றது.