PMSMA மூலம் பாதுகாப்பான தாய்மையை உறுதி செய்வதற்கான முன்னெடுப்புகள் மற்றும் முன்னேற்றத்திற்கான நோக்குடன் ஒரு விரிவாக்கப்பட்ட PMSMA உத்தியானது சமீபத்தில் தொடங்கப்பட்டது.
பிரதான் மந்திரி சுரக்சித் மாத்ரித்வா அபியான் (PMSMA) திட்டம் ஆனது 2016 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சகத்தினால் தொடங்கப் பட்டது.
ஒவ்வொரு மாதமும் 9 ஆம் தேதியன்று அனைத்து கர்ப்பிணிப் பெண்களுக்கும் உறுதியான, விரிவான மற்றும் தரமான பேறு காலத்திற்கு முந்தைய சிகிச்சையை இலவசமாக வழங்குவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
PMSMA திட்டம் ஆனது, கர்ப்பத்தின் 2வது / 3வது மூன்று மாதங்களில் பெண்களுக்கு, நியமிக்கப் பட்ட அரசு சுகாதார மையங்களில் குறைந்தபட்ச செலவிலான பேறு காலத்திற்கு முந்தைய மருத்துவச் சேவைகளுக்கு உத்தரவாதம் அளிக்கிறது.