லக்சம்பர்க் நாட்டின் இளவரசர் ஃபிரடெரிக் சமீபத்தில் POLG மைட்டோகாண்ட்ரியல் நோயால் உயிரிழந்தார்.
இது 5,000 பேரில் ஒருவரைப் பாதிக்கும் ஓர் அரிய மரபணு கோளாறு ஆகும்.
POLG என்பது உடலின் செல்களின் ஆற்றலை இழக்கச் செய்யும் ஒரு மரபணு சார்ந்த மைட்டோகாண்ட்ரியல் கோளாறு ஆகும்.
இது பல் உறுப்பு செயலிழப்பு மற்றும் இறுதியில் உயிரிழப்பிற்கு வழிவகுக்கிறது.
அவருக்கு இந்த நோய்ப் பாதிப்பு இருந்ததைக் கண்டறிந்ததைத் தொடர்ந்து, அவர் 2022 ஆம் ஆண்டில் POLG அறக்கட்டளையை நிறுவினார்.
இந்த அறக்கட்டளையானது, இதற்கான ஆராய்ச்சியை மிக நன்கு ஆதரிப்பதையும் இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு விழிப்புணர்வை நன்கு அதிகரிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.