TNPSC Thervupettagam

POSH சட்டத்தின் கீழ் மாவட்ட அதிகாரிகள்

October 29 , 2023 266 days 182 0
  • சமீபத்தில், பணியிடத்தில் நிகழும் பாலியல் துன்புறுத்தலிலிருந்து பெண்களைப் பாதுகாத்தல் (POSH) சட்டத்தின் கீழ் மாவட்ட அதிகாரிகளை நியமிப்பதற்கு அனைத்து மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேச அரசுகளின் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்திற்கு இந்திய உச்ச நீதிமன்றம் (SC) ஆனது உத்தரவிட்டுள்ளது.
  • POSH என்பது 2013 ஆம் ஆண்டு பணியிடத்தில் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் துன்புறுத்தல்கள் (தடுப்பு, தடை மற்றும் தீர்வு காணுதல்) சட்டத்தினைக் குறிக்கிறது.
  • இது பணியிடங்களில் பெண்கள் எதிர்கொள்ளும் பாலியல் துன்புறுத்தல் போன்ற பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இந்தச் சட்டமானது ஒவ்வொரு மாவட்டத்திலும் இச்சட்டத்தை செயல்படுத்துவதில் முக்கியமானப் பங்கினையும் வகிக்கும் ஒரு அதிகாரியை நியமிக்க வேண்டும் என்று குறிப்பிடுகிறது.
  • இந்த மாவட்ட அதிகாரிகள் 10க்கும் குறைவான தொழிலாளர்களைக் கொண்ட சிறு நிறுவனங்களில் பணிபுரியும் பெண்களிடமிருந்து புகார்களைப் பெற்று அதற்கு தீர்வு காண்பதற்காக உள்ளூர்ப் புகார்க் குழுக்களை (LCCs) அமைப்பர்.
  • இந்தச் சட்டத்தின் கீழ் கிராமப்புற, பழங்குடியின மற்றும் நகர்ப்புறங்களில் தலைமை அதிகாரிகளை நியமிக்கும் பொறுப்பும் ஒரு மாவட்ட அதிகாரியின் பொறுப்புகளில் ஒன்றாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்