2016 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட குறுகிய சாகுபடி கால நெல் வகை PR-126 ஆனது பஞ்சாப் பகுதியில் பரவலாகப் பயிரிடப்படுகிறது.
குறுகிய வளர்ச்சி காலம், அதிக மகசூல், குறைந்தபட்சப் பூச்சிக் கொல்லி தெளிப்புத் தேவைகள் மற்றும் சிறந்த OTR ஆகியவற்றால் இந்த ரக நெல் ஆனது விவசாயிகள் இடையே பிரபலமடைந்தது.
இது ஒரு ஏக்கருக்கு சராசரியாக 30 குவிண்டால்களுக்கு மேலான மகசூலினை தந்தது.
2023-24 மற்றும் 2024-25 ஆம் ஆண்டின் பயிர் பருவங்களில் இந்த மாநிலத்தில் அதிக நிலப்பரப்பிலான (தோராயமாக 32 லட்சம் ஹெக்டேர்) நெல் சாகுபடியானது மேற் கொள்ளப் பட்டுள்ளது.
தற்போது அதன் குறைந்தப் பயன்படு பொருள் விளைவு விகிதம் (நெல் அரைவைக்குப் பின்னர் கிடைக்கும் அரிசியின் அளவு) காரணமாக குறைந்துள்ளது.