ஐஐடி – தில்லியைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் இந்தியாவில் கோவிட் – 19 பரவலைக் கணிப்பதற்காக இணைய வழியில் இயங்கும் ஒரு முகப்புப் பலகையை உருவாக்கியுள்ளனர்.
இந்த முகப்புப் பலகையானது “PRACRITI – இந்தியாவில் கொரானா நோய்த் தொற்று மற்றும் பரவலின் கணிப்பு & மதிப்பீடு” (Prediction and Assessment of Corona Infections and Transmissions in India) என்று பெயரிடப் பட்டுள்ளது.
இந்த முகப்புப் பலகையானது அடிப்படை மறு உருவாக்க எண்ணான “R இன்மை” (R naught) என்பதனை அளிக்கின்றது.
R0 என்பது இந்த வைரஸானது ஒரு நபரிடமிருந்து மற்றவர்களுக்குப் பரவியுள்ளவர்களின் எண்ணிக்கையைக் குறிக்கின்றது.
இந்த முகப்புப் பலகையானது தேசியப் பேரிடர் மேலாண்மை ஆணையம், மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் மற்றும் உலக சுகாதார அமைப்பு ஆகியவற்றிடம் இருக்கும் தரவின் அடிப்படையில் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் மாநிலத்திற்கும் RO மதிப்பினை அளிக்கின்றது.
எனவே RO-வின் உதவியுடன், நோய்ப் பரவலின் எதிர்காலக் கணிப்புகளைப் பெற முடியும்.