வானியலாளர்கள் நிலவின் மீதும், அதைச் சுற்றியுள்ள சுற்றுப்பாதையிலும் உயர் தெளிவுத் திறன் கொண்ட தொலைநோக்கிகளை நிறுவுவதன் மூலம் பேரண்டத்தில் ஒரு புதிய கண்காணிப்பு இடத்தினைத் திறக்க திட்டமிட்டு வருகின்றனர்.
இதனை உருவாக்குவதற்காக இந்தியாவின் PRATUSH உட்பட, உலகெங்கிலும் உள்ள வானியலாளர்களிடமிருந்து எண்ணற்ற முன்மொழிவுகள் முன் வைக்கப்பட்டுள்ளன.
PRATUSH (ஹைட்ரஜனில் இருந்து பெறப்படும் சமிஞ்கைகளை நன்கு பயன்படுத்திப் பிரபஞ்சத்தின் மறு அயனியாக்கத்தினை- மறுசீரமைப்பை - ஆய்வு செய்தல்) ஆனது நிலவின் தொலைதூர பகுதியில் அமையும்.
இஸ்ரோவின் மிக அதீத ஒத்துழைப்புடன் பெங்களூரில் உள்ள இராமன் ஆராய்ச்சி நிறுவனத்தினால் PRATUSH கட்டமைக்கப்படுகிறது.