விண்வெளி வாகன காற்று-வெப்ப-இயக்கவியல் பகுப்பாய்விற்கான (PraVaHa) இணை நிலை RANS தீர்வு அமைப்பு என்ற கணினி திரவ இயக்கவியல் (CFD) மென்பொருளை ISRO உருவாக்கியுள்ளது.
இதன் மூலம் ஏவுகணை வாகனங்கள், இறக்கைகள் கொண்ட மற்றும் இறக்கைகள் இல்லாத மறு நுழைவு வாகனங்களில் வெளிப்புற மற்றும் உட்புறப் பாய்வுகளை ஒத்தவாறான அமைப்பினை உருவாக்க முடியும்.
PraVaHa ககன்யான் திட்டத்தில் மனிதர்களைக் கொண்ட ஏவுகணை வாகனங்கள், அதாவது HLVM3, விண்வெளி வீரர்கள் தப்பித்தல் அமைப்பு (CES) மற்றும் விண்வெளி வீரர்கள் தப்பித்தலுக்கானப் பெட்டகம் ஆகியவற்றின் மீதான காற்றியக்கவியல் பகுப்பாய்விற்காக பரவலாகப் பயன்படுத்தப்பட்டது.