பூமியின் துருவங்களில் இருந்து இழக்கப்படும் வெப்பத்தை அளவிடுவதற்காக, CubeSats (6U) எனப்படும் சிறிய ஓர் இணை செயற்கைக்கோள்களை நாசா சமீபத்தில் விண்ணில் ஏவியது.
இந்த ஆய்வுத் திட்டத்திற்கு PREFIRE (துருவ அகச்சிவப்பு அலை நீளத்தில் துருவ கதிர் வீச்சு ஆற்றல் சோதனை) என பெயரிடப்பட்டுள்ளது.
பூமியின் துருவங்களில் இருந்து வெளிவரும் வெப்ப உமிழ்வுகளை ஆய்வு செய்வதன் மூலம் கிரகத்தின் ஆற்றல் உட்கிரகித்தல் மற்றும் இழப்பு செயல்முறையினைப் புரிந்து கொள்வதில் உள்ள ஒரு முக்கியமான இடைவெளியை நிரப்புவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.