கல்வி அமைச்சகம் ஆனது, 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்காக 'PRERANA: ஓர் அனுபவ கற்றல் திட்டத்தினை' தொடங்கியுள்ளது.
வாரந்தோறும் நடத்தப்படுகின்ற இந்த உறைவிடப் பள்ளி முன்னெடுப்பு ஆனது, தேர்ந்தெடுக்கப்பட்ட 20 மாணவர்களுக்கு இத்தகையக் கல்வி வசதியை வழங்குகிறது மற்றும் குஜராத்தின் மெஹ்சானாவில் உள்ள ஒரு வட்டார மொழிப் பள்ளியில் மேற் கொள்ளப்படுகிறது.
PRERANA பள்ளியானது காந்திநகரின் இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகத்தினால் தயாரிக்கப்பட்ட மதிப்பு அடிப்படையிலான ஒன்பது தலைப்புகளின் அடிப்படையிலான ஒரு பாடத்திட்டத்தைப் பின்பற்றுகிறது.