இந்தியத் தலைமை மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்பு (DCGI) ஆனது, என்டோட் பார்மாசுட்டிகல்ஸ் நிறுவனத்தின் PresVu என்ற கண் சொட்டு மருந்துக்கான உரிமத்தை இடை நிறுத்தி வைத்துள்ளது.
இது வெள்ளெழுத்து (ப்ரெஸ்பியோபியா) உள்ளவர்களுக்கு எழுத்துகளைப் படிக்க உதவும் கண்ணாடிகளின் தேவையைக் குறைப்பதற்கானதாகும்.
நிறுவனத்தின் அங்கீகரிக்கப்படாத விளம்பரங்கள், தயாரிப்பு பொருளின் பாதுகாப்பு தரம் மற்றும் நோயாளிகளால் அவை தவறாகப் பயன்படுத்தப்படுவதைப் பற்றிய பல சந்தேகங்களை உருவாக்குவதன் காரணமாக இந்த இடை நிறுத்த உத்தரவு வழங்கப் பட்டுள்ளது.