இஸ்ரோவின் துருவ செயற்கைக்கோள் ஏவூர்தி C-37 (PSLV C-37 ஏவூர்தி) வாகனத்தின் மேல் நிலையானது மிகவும் வெற்றிகரமாக பூமியின் வளிமண்டலத்தில் மீண்டும் நுழைந்துள்ளது.
PSLV C-37 ஏவூர்தியானது 2017 ஆம் ஆண்டு பிப்ரவரி 15 ஆம் தேதியன்று கார்டோசாட்-2D செயற்கைக் கோளினையும், மேலும் 103 செயற்கைக்கோள்களையும் ஏந்தி விண்ணில் ஏவப்பட்டது.
ஒரே ஏவூர்தியில் 104 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்திய முதல் திட்டம் என்ற வரலாற்றினை இஸ்ரோ படைத்தது.
விண்ணில் ஏவப்பட்ட எட்டு ஆண்டுகளுக்குள் இந்த ஏவூர்தியின் பாகங்கள் வளி மண்டலத்தில் மீண்டும் நுழைவது என்பது சர்வதேச விண்வெளிக் குப்பைகளைக் குறைப்பதற்கான வழிகாட்டுதல்களுடன் முழுமையாக இணங்குவதைக் குறிக்கிறது.
பல்வேறு விண்வெளிக் குப்பைகள் தொடர்பான முகமைகளுக்கு இடையிலான ஒருங்கிணைப்புக் குழுவின் (IADC) வழிகாட்டுதல் ஆனது, புவி தாழ் மட்ட சுற்றுப் பாதையில் (LEO) செயலிழந்த கலத்தின் ஆய்வுப் பயணத்திற்குப் பிந்தைய சுற்றுப் பாதையில் அதன் செயல்பாட்டுக் காலத்தினை சுமார் 25 ஆண்டுகளாகக் குறைக்க பரிந்துரைக்கிறது.