TNPSC Thervupettagam

PSLV C-42 வெற்றிகரமாக செலுத்தப் படுதல்

September 17 , 2018 2261 days 672 0
  • செப்டம்பர் 16, 2018 அன்று இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகமானது (ISRO – Indian Space Research Organisation) ஐக்கிய ராஜ்ஜியத்திற்கான 2 புவிக் கண்காணிப்பு செயற்கைக் கோள்களுடன் தனது துருவ செயற்கைக்கோள் ஏவு வாகனத்தை (PSLV C42) விண்ணில் செலுத்தியுள்ளது.
  • ஆந்திர மாநிலத்தின் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தின் முதல் ஏவுதளத்திலிருந்து08 மணியளவில் (இரவு வேளையில்) PSLV C-42 ஆனது ஏவப்பட்டது.
  • இதில் UK-வைச் சேர்ந்த சர்ரே சேட்டிலைட் டெக்னாலஜி லிமிடெட் நிறுவனத்தின் S1-4 மற்றும் நோவா சர் (NovaSAR) ஆகிய இரண்டு புவி கண்காணிப்பு செயற்கைக் கோள்களும் சூரிய ஒத்தியக்க சுற்று வட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டன.
    • நோவா சர் ஆனது S பேண்ட் சிந்தெடிக் அபெர்ச்சர் ரேடார் செயற்கைக் கோளாகும்.
    • S1-4 ஆனது உயர்தெளிவுத் திறனுடைய ஒளியியல் புவிக் கண்காணிப்பு செயற்கைக் கோளாகும்.
  • PSLV C42 ஆனது இந்த ஆண்டின் முதல் முழு வணிக ரீதியான பயணமாகவும் PSLV-ன் 44வது பயணமாகவும் அமைந்துள்ளது.
  • இந்த திட்டமானது இங்கிலாந்து நிறுவனம் மற்றும் ISROவின் வணிகப் பிரிவான ஆன்ட்ரிக்ஸ் கார்ப்பரேஷன் லிமிடெட் ஆகியவற்றிற்கிடையேயான வணிக ஏற்பாடு ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்