TNPSC Thervupettagam

PSLV-C53 விண்வெளித் திட்டம்

July 4 , 2022 783 days 959 0
  • ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் உள்ள இரண்டாவது ஏவுதளத்தில் இருந்து PSLV-C53 விண்கலம் ஏவப்பட்டது.
  • இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமானது அதன் துருவச் செயற்கைக்கோள் ஏவுகலத்தின் மூலம் சிங்கப்பூர் நாட்டின் மூன்று செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தியது.
  • இது இந்த மூன்று செயற்கைக்கோள்களை புவியின் தாழ்மட்டச் சுற்றுப்பாதையில் (LEO) நிலை நிறுத்துவதற்காக ஏவப்பட்டது.
  • இது இந்த ஆண்டில் இஸ்ரோ ஏவிய இரண்டாவது செயற்கைக்கோள் மற்றும் இந்திய விண்வெளி நிறுவனம் ஏவிய இரண்டாவது வணிகரீதியிலான ஏவுதலாகும்.
  • PSLV-C53 ஏவுகணை வாகனத்தின் மூலம் ஏவப்படும் 55வது விண்வெளித் திட்டமாகும்.
  • மேலும் இது PSLV-முக்கியப் பகுதியை மட்டும் பயன்படுத்தி ஏவப்படும் 15வது விண்வெளித் திட்டமாகும்.
  • PSLV என்பது இஸ்ரோவின் முக்கிய மற்றும் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட அதன் மிக வெற்றிகரமான ஏவுகலமாகும்.
  • இது கடந்த காலத்தில் 54 முறை விண்ணில் ஏவப்பட்டது.
  • மேலும் இது 2008 ஆம் ஆண்டில் இந்தியா விண்ணில் ஏவிய  மிகவும் வெற்றிகரமான திட்டமான சந்திரயான்-1 விண்வெளித் திட்டம் மற்றும் 2013 ஆம் ஆண்டில் செவ்வாய்க் கிரகத்திற்கு அனுப்பப்பட்ட செவ்வாய்க் கிரகச் சுற்று விண்கலத்தை ஏவுவதற்கும் இது பயன்படுத்தப் பட்டது.
  • இந்த ஏவுகலமானது 600 கிமீ உயரத்தில் உள்ள சூரிய-ஒத்திசைவு துருவ சுற்றுப் பாதைக்கு 1,750 கிலோ வரையிலான விண்வெளிப் பொருட்களை எடுத்துச் செல்லும் திறன் கொண்டது.
  • IRNSS செயற்கைக்கோள் தொகுப்பு போன்ற பல்வேறு செயற்கைக் கோள்களைப் புவி ஒத்திசைவு மற்றும் புவிநிலைச் சுற்றுப்பாதைகளில் செலுத்தவும் இது பயன்படுத்தப் பட்டுள்ளது.


 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்