இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமானது (இஸ்ரோ), அதன் துருவ செயற்கைக் கோள் ஏவுகலம் (PSLV-C54) மூலம் ஒன்பது செயற்கைக் கோள்களை அவற்றின் பல்வேறு சுற்றுப்பாதைகளில் வெற்றிகரமாக நிலைநிறுத்தியது.
இது ஒரு புவிக் கண்காணிப்பு செயற்கைக்கோள் (EOS-06) மற்றும் 8 நுண்ணிய செயற்கைக் கோள் ஆகியவற்றினை உள்ளடக்கியது.
எட்டு நுண்ணிய செயற்கைக்கோள்களில் பூடானுக்கான இஸ்ரோ நுண்ணிய செயற்கைக் கோள்-2 (INS-2B), ஆனந்த், ஆஸ்ட்ரோகாஸ்ட் (நான்கு செயற்கைக் கோள்கள்) மற்றும் இரண்டு தைபோல்ட் ஆகிய செயற்கைக் கோள்கள் அடங்கும்.
EOS-6 என்பது Oceansat வரிசையின் மூன்றாம் தலைமுறை செயற்கைக் கோள் ஆகும்.
EOS-06 ஆனது கடலியல், பருவநிலை மற்றும் வானிலை செயல்பாடுகளில் பயன் படுத்துவதற்காக கடல் பரப்பின் வண்ணம் குறித்தத் தரவு, கடல் மேற்பரப்பு வெப்ப நிலை மற்றும் காற்று திசைகாட்டி தரவு ஆகியவற்றைக் கண்காணிக்கும்.