இஸ்ரோ தனது PSLV-C55/TeLEOS-2 திட்டம் மூலமாக சிங்கப்பூரில் தயாரிக்கப்பட்ட இரண்டு செயற்கைக் கோள்களைக் கொண்ட ஒரு ஏவுகலத்தினை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது.
இந்த இரண்டு செயற்கைக் கோள்களில், TeLEOS-2 முதன்மையானதாகவும், Lumelite-4, 'இணை செயற்கைக் கோளாகவும்' அனுப்பப் பட்டன.
இந்த விண்வெளிப் பயணமானது, துருவநிலைச் செயற்கைக்கோள் ஏவு வாகனத்தின் (PSLV) 57வது விண்வெளிப் பயணத்தினையும் குறிக்கிறது.