இஸ்ரோ நிறுவனமானது, POEM3 எனப்படும் அதன் சுற்றுப்பாதை தளத்தில் 100 W ரக பலபடி சேர்ம மின்பகுளி சவ்வு எரிபொருள் மின்கலம் அடிப்படையிலான மின்னாற்றல் வழங்கீட்டு (FCPS) அமைப்பினை நிறுவி வெற்றிகரமாக பரிசோதித்து உள்ளது.
இது சமீபத்தில் PSLV-C58 ஏவுகலத்தின் மூலம் விண்ணில் ஏவப்பட்டது.
எந்த இடைநிலையிலான படிநிலையும் இல்லாமல் எரிபொருளில் இருந்து நேரடியாக மின்சாரத்தை உற்பத்தி செய்யும் திறன் அவற்றை மிகவும் திறனுள்ள கருவியாக மாற்றுகிறது.
வினைவிளை பொருளாக தண்ணீர் மட்டுமே வெளிவருவதால், அவை முற்றிலும் உமிழ்வு வெளியிடாத அமைப்பு ஆகும்.