இந்தத் திட்டமானது பத்து இந்திய விண்வெளிப் புத்தொழில் நிறுவனங்களுக்கு தங்கள் கருவிகளை விண்வெளிக்கு அனுப்ப உதவியது.
இது PSLV-C60/SPADEX திட்டத்தின் POEM-4 தொகுதியில், அரசு சாரா நிறுவனங்களின் (NGEs) 10 கருவிகளை மிகவும் வெற்றிகரமாக நிறுவுவதற்கும் செயல்படுத்துவதற்கும் உதவியது.
PSLV ஏவுகலத்தின் கடைசிக் கட்டமானது விண்வெளியில் சில மாதங்கள் நிலைத்து இயங்கும் வகையில் மீளுருவாக்கம் செய்யப்பட்டு PS4-சுற்றுப்பாதைச் சோதனை மாதிரி (POEM) என்று பெயரிடப்பட்டுள்ளது.
PSLV POEM என்பது இஸ்ரோ நிறுவனத்தினால் நிலை நிறுத்தப் படுத்தப் பட்டுள்ள ஒரு நடைமுறை தீர்வாகும்.
இந்தியப் புத்தொழில் நிறுவனங்கள், பல்வேறு கல்வி நிறுவனங்கள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்கள் ஆனது தங்களது முழு செயற்கைக்கோள்களையும் ஏவாமல் தாங்கள் உருவாக்கும் விண்வெளித் தொழில்நுட்பங்களைப் பரிசோதிக்க அனுமதிக்கிறது.