TNPSC Thervupettagam

Q3 2023 மெர்காம் இந்தியா மேற்கூரை சூரிய ஒளி மின்தகடு அறிக்கை

December 9 , 2023 223 days 159 0
  • இது மெர்காம் இந்தியா ஆராய்ச்சி நிறுவனத்தால் வெளியிடப்பட்டது.
  • இந்தியாவில் மேற்கூரை சூரிய ஒளி மின்தகடு நிறுவல்கள் ஆண்டுக்கு ஆண்டு (YoY) 34.7% உயர்வை பதிவு செய்துள்ளன.
  • 2023 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் இந்தியா 907 மெகாவாட் சூரியஒளி ஆற்றல் உற்பத்தித் திறனைச் சேர்த்தது.
  • இது 2023 ஆம் காலண்டர் ஆண்டின் (CY) மூன்றாவது காலாண்டில் (ஜூலை-செப்டம்பர்) காலக் கட்டத்தில் நிகந்துள்ளது.
  • இதில் மகாராஷ்டிரா (26.5%) அதிகப்படியான  ஆற்றல் திறனை இணைத்துள்ளது.
  • அதைத் தொடர்ந்து கர்நாடகா (20.3%) மற்றும் தமிழ்நாடு (19.5%) ஆகிய மாநிலங்கள் உள்ளன.
  • 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாத நிலவரப்படி, இந்தியாவின் மொத்த திறந்த அணுகல் சூரிய திறன் 11 ஜிகாவாட்டை எட்டியது.
  • ஒட்டு மொத்த மொத்தத் திறனில் 33.3% கர்நாடகாவின் பங்கு ஆகும்.
  • அதனைத் தொடர்ந்து மகாராஷ்டிரா (14.1%) மற்றும் தமிழ்நாடு (10.3%) ஆகியவை உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்