இந்தியத் தர சபையானது (QCI) QCI சுரஜ்யா அங்கீகாரம் மற்றும் தரவரிசை என்ற கட்டமைப்பை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்தக் கட்டமைப்பு ஆனது சிக்சா (கல்வி), ஸ்வஸ்த்யா (உடல்நலம்), சம்ரித்தி (வளம்), மற்றும் சுஷாசன் (ஆளுகை) ஆகிய நான்கு பிரிவுகளின் கீழ் வகைப்படுத்தப் பட்டு உள்ளது.
இந்த முக்கியமான பகுதிகளில் மாநிலங்கள் மற்றும் நிறுவனங்களின் சிறந்த செயல் திறன் மற்றும் தரத்திற்கான உறுதிப்பாடு ஆகியவற்றை சுரஜ்யா அங்கீகாரம் நன்கு அங்கீகரிக்கிறது.
சிக்சா தரவரிசையில், உத்தரப் பிரதேச மாநிலம் ஆனது அதிக எண்ணிக்கையிலான அங்கீகாரங்கள், மதிப்பீடுகள் மற்றும் தர வரிசையுடன் முன்னணியில் உள்ளது.
ஒன்றியப் பிரதேச அளவில் டெல்லி பிரதான இடத்தினைப் பிடித்துள்ளது.
ஸ்வஸ்த்யா பிரிவில், சத்தீஸ்கர், கர்நாடகா, கேரளா, இராஜஸ்தான், மிசோரம் மற்றும் மணிப்பூர் ஆகியவை ஆயுஷ்மான் ஆரோக்கிய யோஜனாவில் (NABH) முழுமையான அங்கீகாரத்துடன் தனித்து நிற்கின்றன.
மருத்துவ முதன்மை நிலைச் சோதனை ஆய்வகங்கள் (MELT) தரவரிசையில் (NABL) தமிழ்நாடு மற்றும் மகாராஷ்டிரா முன்னணியில் உள்ளன.