TNPSC Thervupettagam

QCI சுரஜ்யா அங்கீகாரம் மற்றும் தரவரிசை கட்டமைப்பு

August 19 , 2024 99 days 140 0
  • இந்தியத் தர சபையானது (QCI) QCI சுரஜ்யா அங்கீகாரம் மற்றும் தரவரிசை என்ற  கட்டமைப்பை அறிமுகப்படுத்தியுள்ளது.
  • இந்தக் கட்டமைப்பு ஆனது சிக்சா (கல்வி), ஸ்வஸ்த்யா (உடல்நலம்), சம்ரித்தி (வளம்), மற்றும் சுஷாசன் (ஆளுகை) ஆகிய நான்கு பிரிவுகளின் கீழ் வகைப்படுத்தப் பட்டு உள்ளது.
  • இந்த முக்கியமான பகுதிகளில் மாநிலங்கள் மற்றும் நிறுவனங்களின் சிறந்த செயல் திறன் மற்றும் தரத்திற்கான உறுதிப்பாடு ஆகியவற்றை சுரஜ்யா அங்கீகாரம் நன்கு அங்கீகரிக்கிறது.
  • சிக்சா தரவரிசையில், உத்தரப் பிரதேச மாநிலம் ஆனது அதிக எண்ணிக்கையிலான அங்கீகாரங்கள், மதிப்பீடுகள் மற்றும் தர வரிசையுடன் முன்னணியில் உள்ளது.
  • ஒன்றியப் பிரதேச அளவில் டெல்லி பிரதான இடத்தினைப் பிடித்துள்ளது.
  • ஸ்வஸ்த்யா பிரிவில், சத்தீஸ்கர், கர்நாடகா, கேரளா, இராஜஸ்தான், மிசோரம் மற்றும் மணிப்பூர் ஆகியவை ஆயுஷ்மான் ஆரோக்கிய யோஜனாவில் (NABH) முழுமையான அங்கீகாரத்துடன்  தனித்து நிற்கின்றன.
  • மருத்துவ முதன்மை நிலைச் சோதனை ஆய்வகங்கள் (MELT) தரவரிசையில் (NABL) தமிழ்நாடு மற்றும் மகாராஷ்டிரா முன்னணியில் உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்