QS அமைப்பின் உலகப் பல்கலைக்கழகத் தரவரிசை: நிலைத்தன்மை 2025
December 18 , 2024 31 days 102 0
QS அமைப்பின் 2025 ஆம் ஆண்டிற்கான நிலைத் தன்மை தரவரிசையில் மொத்தம் 78 இந்தியப் பல்கலைக்கழகங்கள் இடம் பெற்றுள்ளன.
இந்த ஆண்டு, இந்தத் தரவரிசையில் மொத்தம் 21 பல்கலைக் கழகங்கள் புதியதாக இடம் பெற்றுள்ளன.
இந்தியாவில் இந்த ஆண்டு டெல்லியின் இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகம் (உலக அளவில் 171வது இடம்) முதல் இடத்தைப் பெற்றுள்ளது.
கான்பூரின் இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகம் மற்றும் சென்னையின் இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகம் ஆகியவை இந்தியாவில் முறையே நான்காவது மற்றும் ஐந்தாவது இடத்தையும், உலக அளவில் முறையே 245வது மற்றும் 277வது இடத்தையும் பெற்றன.
உலகளவில், டொராண்டோ பல்கலைக்கழகமானது இந்த ஆண்டின் தரவரிசையில் முதல் இடத்தினைப் பெற்ற பல்கலைக்கழகம் ஆகும்.
அதைத் தொடர்ந்து சுவிட்சர்லாந்து நாட்டின் ETH சூரிச் பல்கலைக்கழகமும் சுவீடனில் உள்ள லுண்ட் என்ற பல்கலைக்கழகமும் மற்றும் பெர்க்லியில் உள்ள கலிபோர்னியா பல்கலைக் கழகமும் (UCB) ஆகியவை கூட்டாக மூன்றாவது இடத்திலும் உள்ளன.
ஆசியாவில், நான்கு நாடுகளைச் சேர்ந்த ஆறு பல்கலைக்கழகங்கள் இதன் முதல் 100 இடங்களில் இடம் பெற்றுள்ளன.