TNPSC Thervupettagam

QS அமைப்பின் உலகப் பல்கலைக்கழக நிலைத்தன்மை தரவரிசை 2024

December 12 , 2023 348 days 300 0
  • பட்டியலிடப்பட்ட 56 இந்தியப் பல்கலைக்கழகங்களில், டெல்லி பல்கலைக்கழகம் (DU) உலகளவில் 220வது இடத்தைப் பிடித்தது.
  • இப்பல்கலைக்கழகம் ஆனது, ஆசியாவில் 30வது இடத்தையும் பெற்றுள்ளது.
  • சென்னை, காரக்பூர், ரூர்க்கி மற்றும் டெல்லி ஆகிய இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகங்கள் ஆகியவை முறையே 344வது, 349வது, 387வது மற்றும் 426வது இடங்களைப் பெற்றுள்ளன.
  • சுற்றுச்சூழல் நிலைத்தன்மை குறிகாட்டியில், நான்கு இந்தியப் பல்கலைக்கழகங்கள் உலகின் முன்னணி 100 பல்கலைக்கழகங்களில் இடம் பெற்றுள்ளன. வேலூர் தொழில் நுட்பக் கழகம் தேசிய அளவில் (உலகளவில் 49) முதலிடம் பெற்றுள்ளது.
  • இந்த ஆண்டு தரவரிசையில் சிறந்து விளங்கும் நாடுகளில் ஒன்றாக ஆஸ்திரேலியா தனித்து நிற்கிற நிலையில், அதன் முதல் 10 இடங்களில் இடம் பெற்ற பல்கலைக் கழகங்களின் எண்ணிக்கையில் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது.
  • இந்தப் பட்டியலில் மூன்று பல்கலைக்கழகங்கள் இடம் பெற்ற கொண்ட கனடா நாட்டினைத் தொடர்ந்து, இரண்டு பல்கலைக்கழகங்களைக் கொண்டு  ஐக்கியப் பேரரசு மற்றும் ஆஸ்திரேலியா ஆகியவை இடம் பெற்றுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்