QS அமைப்பின் பாடப் பிரிவு அடிப்படையிலான 12வது உலகப் பல்கலைக்கழகத் தர வரிசையானது (2023) சமீபத்தில் வெளியிடப்பட்டது.
QS அமைப்பின் தரவரிசையில் டெல்லியின் இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகம் பொறியியல் துறையின் முன்னணி 50 நிறுவனங்களில் இடம் பிடித்துள்ளது.
5 பாடப் பிரிவுகளில் முன்னிலைப் பெற்று இந்தப் பட்டியலின் முதல் 100 இடங்களில் இந்தியா இடம் பெற்றுள்ளது.
இந்த ஆண்டு, இந்திய உயர்கல்வி நிறுவனங்கள் வழங்கும் பல்வேறு துறைகள் சார்ந்த 44 பாடப் பிரிவுத் திட்டங்கள் உலகளவில் முதல் 100 இடங்களில் இடம் பெற்றுள்ளன.
கடந்த ஆண்டு இந்த எண்ணிக்கை 35 ஆக இருந்தது.
மும்பையின் இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகம் கணிதப் பாடப்பிரிவில் 67வது இடத்தில் உள்ளது.
கான்பூர் இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகமானது பொறியியல்-மின்-மின்னணு பாடப் பிரிவில் 87வது இடத்தையும், கணினி அறிவியல் தகவல் அமைப்பு சார்ந்த பாடப் பிரிவுகளில் 96வது இடத்தையும் பெற்றுள்ளது.
கரக்பூர் இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகமானது கணினி அறிவியல் மற்றும் தகவல் அமைப்பு சார்ந்த பாடப் பிரிவுகளில் 94வது இடத்தைப் பிடித்துள்ளது.
சென்னையின் இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகமானது கணிதப் பாடப் பிரிவில் 98வது இடத்தைப் பிடித்துள்ளது.