TNPSC Thervupettagam

QS அமைப்பின் உலகப் பல்கலைக் கழகங்களின் தரவரிசை

March 31 , 2023 605 days 323 0
  • QS அமைப்பின் பாடப் பிரிவு அடிப்படையிலான 12வது உலகப் பல்கலைக்கழகத் தர வரிசையானது (2023) சமீபத்தில் வெளியிடப்பட்டது.
  • QS அமைப்பின் தரவரிசையில் டெல்லியின் இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகம் பொறியியல் துறையின் முன்னணி 50 நிறுவனங்களில் இடம் பிடித்துள்ளது.
  • 5 பாடப் பிரிவுகளில் முன்னிலைப் பெற்று இந்தப் பட்டியலின் முதல் 100 இடங்களில் இந்தியா இடம் பெற்றுள்ளது.
  • இந்த ஆண்டு, இந்திய உயர்கல்வி நிறுவனங்கள் வழங்கும் பல்வேறு துறைகள் சார்ந்த 44 பாடப் பிரிவுத் திட்டங்கள் உலகளவில் முதல் 100 இடங்களில் இடம் பெற்றுள்ளன.
  • கடந்த ஆண்டு இந்த எண்ணிக்கை 35 ஆக இருந்தது.
  • மும்பையின் இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகம் கணிதப் பாடப்பிரிவில் 67வது இடத்தில் உள்ளது.
  • கான்பூர் இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகமானது பொறியியல்-மின்-மின்னணு பாடப் பிரிவில் 87வது இடத்தையும், கணினி அறிவியல் தகவல் அமைப்பு சார்ந்த பாடப் பிரிவுகளில் 96வது இடத்தையும் பெற்றுள்ளது.
  • கரக்பூர் இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகமானது கணினி அறிவியல் மற்றும் தகவல் அமைப்பு சார்ந்த பாடப் பிரிவுகளில் 94வது இடத்தைப் பிடித்துள்ளது.
  • சென்னையின் இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகமானது கணிதப் பாடப் பிரிவில் 98வது இடத்தைப் பிடித்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்