உலகளவில், மாசாசூசெட்ஸ் தொழில்நுட்பக் கல்வி நிறுவனமானது, 13வது முறையாக இந்த ஆண்டும் ‘உலகின் சிறந்த கல்வி நிறுவனம்’ என்ற இடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளது.
மும்பையின் இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகமானது இந்திய அளவில் முதல் இடத்தைப் பெற்றுள்ளது.
அதைத் தொடர்ந்து டெல்லியின் இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகம் மற்றும் பெங்களூருவின் இந்திய அறிவியல் கல்வி நிறுவனம் ஆகியவை இடம் பெற்றுள்ளன.
காரக்பூர் இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகம் மற்றும் சென்னை இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகம் ஆகியவை முறையே 4வது மற்றும் 5வது இடங்களைப் பெற்றுள்ளன.