QS அமைப்பின் உலக எதிர்காலத் திறன்கள் குறியீடு 2025
January 20 , 2025 2 days 55 0
செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் பசுமை நுட்பம் சார்ந்தத் திறன்கள் உள்ளிட்ட எதிர்கால வேலைவாய்ப்புகளுக்கான தயார்நிலையின் அடிப்படையில் அமெரிக்க நாட்டிற்கு அடுத்தபடியாக இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது.
கல்வி திறன்கள் மற்றும் முதலாளிகளின் தேவைகளுக்கு இடையிலான ஒருங்கமைவு, கல்வியியல் தயார்நிலை மற்றும் பொருளாதார மாற்றம் போன்ற சில ஒட்டுமொத்த குறிகாட்டிகள் அடைப்படையில் உலகளவில் இந்தியா 25வது இடத்தைப் பிடித்தது.
இந்த அறிக்கையின்படி இந்தியாவின் ஒட்டுமொத்தத் தரவரிசையானது, அதை "எதிர் கால திறன்களில் போட்டித்தன்மை மிக்கது" என்ற நிலையில் வைக்கிறது.
இதில் முதல் பத்து இடங்களில் உள்ள அமெரிக்கா, ஐக்கியப் பேரரசு, ஜெர்மனி, ஆஸ்திரேலியா மற்றும் கனடா போன்ற நாடுகள் "எதிர்கால திறனில் முன்னோடியான நாடுகள்" என வகைப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த அறிக்கையில் 'வேலை வாய்ப்பின் எதிர்காலம்' என்ற குறிகாட்டியில் இந்தியா இரண்டாவது இடத்தினைப் பெற்றுள்ளது.