இந்தத் தரவரிசையின் முதல் பதிப்பானது உலகம் முழுவதும் உள்ள உயர்கல்வி நிறுவனங்களில் சமூகம் மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மையின் செயல்திறனை மையமாகக் கொண்டு வெளியிடப்பட்டது.
பதினைந்து இந்திய நிறுவனங்கள் மற்றும் பல்கலைக் கழகங்கள் QS அமைப்பின் 2023 ஆம் ஆண்டிற்கான நிலையான தரவரிசையில் இடம் பெற்றுள்ளன.
மும்பையின் இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகம் (172), டெல்லியின் இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகம் மற்றும் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் ஆகியவை இத்தரவரிசையில் இடம்பெற்றுள்ளன.
இதில் இடம் பெற்ற 15 நிறுவனங்களில், ஏழு இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகங்கள் மற்றும் இந்திய அறிவியல் கல்விக் கழகங்கள் உள்ளன.
டெல்லி பல்கலைக்கழகம், ஜாதவ்பூர் பல்கலைக்கழகம், அலிகார் முஸ்லிம் பல்கலைக் கழகம் மற்றும் பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் ஆகியவையும் இப்பட்டியலில் இடம் பெற்றுள்ளன.
இருப்பினும், இந்தியக் கல்வி நிறுவனங்கள் எதுவும் முதல் 200 இடங்களுக்குள் இடம் பெறவில்லை.
இந்தியாவின் சிறந்த நிலைத்தன்மை நிறுவனமான மும்பையின் இந்தியத் தொழில் நுட்பக் கல்விக் கழகமானது 281 முதல் 300 வரையிலான தரவரிசையில் இடம் பெற்று உள்ளது.