QS அமைப்பின் பாட வாரியான உலகப் பல்கலைக்கழகத் தரவரிசை 2025
March 18 , 2025 14 days 65 0
மாசசூசெட்ஸ் தொழில்நுட்ப நிறுவனம் (MIT) ஆனது, QS அமைப்பின் 2025 ஆம் ஆண்டு உலகப் பல்கலைக்கழக தரவரிசையில் தொடர்ந்து 13வது ஆண்டாக முதலிடத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது.
இதில் லண்டன் இம்பீரியல் கல்லூரியானது இரண்டாவது இடத்தையும், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மற்றும் ஹார்வர்ட் பல்கலைக்கழகம் முறையே மூன்றாவது மற்றும் நான்காவது இடத்தையும் பிடித்துள்ளன.
கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் முதல் ஐந்து இடங்களில் ஒன்றாக இடம் பிடித்துள்ளது.
பொறியியல் - பெட்ரோலியம் என்ற பிரிவில் சென்னையின் இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகமானது உலகளவில் 31வது இடத்தில் உள்ளது.
பொறியியல் - கனிம மற்றும் சுரங்கப் பிரிவில் தன்பாத்தின் இந்திய சுரங்கக் கல்லூரி உலகில் 20வது இடத்தைப் பிடித்துள்ளது.
பொறியியல் - கனிம மற்றும் சுரங்கப் பிரிவில் மும்பையின் இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகமானது உலகளவில் 40வது இடத்தைப் பிடித்துள்ளது.
பொறியியல் - கனிம மற்றும் சுரங்கப் பிரிவில் காரக்பூரின் இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகமானது 45வது இடத்தைப் பிடித்துள்ளது.
பொறியியல் - மின்சாரம் மற்றும் மின்னணு துறையில் டெல்லியின் இந்தியத் தொழில் நுட்பக் கல்விக் கழகமானது 47வது இடத்தைப் பிடித்துள்ளது.
பொறியியல் - மின்சாரம் மற்றும் மின்னணு துறையில் மும்பையின் இந்தியத் தொழில் நுட்பக் கல்விக் கழகமானது உலகளவில் 50வது இடத்தில் உள்ளது.
வணிகம் மற்றும் மேலாண்மைப் படிப்புகளில் உலகளவில் அகமதாபாத்தின் இந்திய மேலாண்மைக் கல்வி நிறுவனமானது 27வது இடத்தைப் பிடித்துள்ளது.
வணிகம் மற்றும் மேலாண்மை படிப்புகளில் பெங்களூருவின் இந்திய மேலாண்மைக் கல்வி நிறுவனமானது 40வது இடத்தைப் பிடித்துள்ளது.
ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகமானது மேம்பாட்டுப் பிரிவு படிப்புகளில் 29வது இடத்தைப் பிடித்துள்ளது.