QS ஆணையத்தின் ஆசியப் பல்கலைக்கழகங்களின் தரவரிசை 2023
November 15 , 2022 739 days 403 0
ஐக்கிய இராஜ்ஜியத்தில் அமைந்துள்ள குவாக்குரேலி சிமண்ட்ஸ் (QS) எனப்படும் தர வரிசை ஆணையமானது 2023 ஆம் ஆண்டிற்கான ஆசியப் பல்கலைக்கழகத் தர வரிசையினை வெளியிட்டது.
2023 ஆம் ஆண்டு தரவரிசையானது 15வது தரவரிசையாகும்.
இது ஆசியக் கண்டத்தில் உள்ள சிறந்தப் பல்கலைக்கழகங்களை தரவரிசைப் படுத்துகிறது.
இந்தத் தரவரிசையானது 11 குறிகாட்டிகளை அடிப்படையாகக் கொண்டதாகும்.
இந்தத் தரவரிசையில் சீனாவின் பீக்கிங் பல்கலைக்கழகம் முதலிடத்தில் உள்ளது.
இது 2022 ஆம் ஆண்டு தரவரிசையில் இரண்டாவது இடத்தைப் பெற்றிருந்தது.
சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகம் மற்றும் சீனாவில் அமைந்துள்ள சிங்குவா பல்கலைக் கழகம் ஆகியவை மற்ற முன்னணி பல்கலைக்கழங்கங்கள் ஆகும்.
சீனாவைச் சேர்ந்த 5 பல்கலைக் கழகங்கள் முதல் 10 இடங்களில் இடம் பெற்றுள்ளன.
மொத்தம் 118 இந்திய நிறுவனங்கள் இந்தத் தரவரிசையில் இடம் பெற்றுள்ளன.
5 இந்தியத் தொழில்நுட்பக் கல்வி கழகங்கள், இந்திய அறிவியல் கல்வி நிறுவனங்கள் மற்றும் டெல்லி பல்கலைக் கழகம் ஆகியவை இந்தத் தரவரிசையில் முதல் 100 இடங்களுக்குள் இடம் பெற்றுள்ளன.
இதன் முதல் 200 இடங்களில் மொத்தம் 19 இந்தியப் பல்கலைக் கழகங்கள் இடம் பெற்று உள்ளன.
மும்பையின் இந்தியத் தொழில்நுட்பக் கல்வி கழகமானது (40) இந்தத் தரவரிசையில் முதலிடத்தில் உள்ளது.
இந்தியாவின் இரண்டாவது முன்னணி பல்கலைக் கழகம் டெல்லியின் இந்தியத் தொழில் நுட்பக் கல்வி கழகமாகும் (46வது இடம்).
பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் கல்வி நிறுவனமானது 52வது இடத்தில் உள்ளது.
அதைத் தொடர்ந்து சென்னையின் இந்தியத் தொழில்நுட்பக் கல்வி கழகம் (53), கரக்பூரின் இந்தியத் தொழில்நுட்பக் கல்வி கழகம் (61), கான்பூரின் இந்தியத் தொழில் நுட்பக் கல்வி கழகம் (66), மற்றும் டெல்லி பல்கலைக்கழகம் (85) ஆகியவை இடம் பெற்றுள்ளன.