TNPSC Thervupettagam

QS ஆணையத்தின் ஆசியப் பல்கலைக்கழகங்களின் தரவரிசை 2023

November 15 , 2022 738 days 401 0
  • ஐக்கிய இராஜ்ஜியத்தில் அமைந்துள்ள குவாக்குரேலி சிமண்ட்ஸ் (QS) எனப்படும் தர வரிசை ஆணையமானது 2023 ஆம் ஆண்டிற்கான ஆசியப் பல்கலைக்கழகத் தர வரிசையினை வெளியிட்டது.
  • 2023 ஆம் ஆண்டு தரவரிசையானது 15வது தரவரிசையாகும்.
  • இது ஆசியக் கண்டத்தில் உள்ள சிறந்தப் பல்கலைக்கழகங்களை தரவரிசைப் படுத்துகிறது.
  • இந்தத் தரவரிசையானது 11 குறிகாட்டிகளை அடிப்படையாகக் கொண்டதாகும்.
  • இந்தத் தரவரிசையில் சீனாவின் பீக்கிங் பல்கலைக்கழகம் முதலிடத்தில் உள்ளது.
  • இது 2022 ஆம் ஆண்டு தரவரிசையில் இரண்டாவது இடத்தைப் பெற்றிருந்தது.
  • சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகம் மற்றும் சீனாவில் அமைந்துள்ள சிங்குவா பல்கலைக் கழகம் ஆகியவை மற்ற முன்னணி பல்கலைக்கழங்கங்கள் ஆகும்.
  • சீனாவைச் சேர்ந்த 5 பல்கலைக் கழகங்கள் முதல் 10 இடங்களில் இடம் பெற்றுள்ளன.
  • மொத்தம் 118 இந்திய நிறுவனங்கள் இந்தத் தரவரிசையில் இடம் பெற்றுள்ளன.
  • 5 இந்தியத் தொழில்நுட்பக் கல்வி கழகங்கள், இந்திய அறிவியல் கல்வி நிறுவனங்கள் மற்றும் டெல்லி பல்கலைக் கழகம் ஆகியவை இந்தத் தரவரிசையில் முதல் 100 இடங்களுக்குள் இடம் பெற்றுள்ளன.
  • இதன் முதல் 200 இடங்களில் மொத்தம் 19 இந்தியப் பல்கலைக் கழகங்கள் இடம் பெற்று உள்ளன.
  • மும்பையின் இந்தியத் தொழில்நுட்பக் கல்வி கழகமானது (40) இந்தத் தரவரிசையில் முதலிடத்தில் உள்ளது.
  • இந்தியாவின் இரண்டாவது முன்னணி பல்கலைக் கழகம் டெல்லியின் இந்தியத் தொழில் நுட்பக் கல்வி கழகமாகும் (46வது இடம்).
  • பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் கல்வி நிறுவனமானது 52வது இடத்தில் உள்ளது.
  • அதைத் தொடர்ந்து சென்னையின் இந்தியத் தொழில்நுட்பக் கல்வி கழகம் (53), கரக்பூரின் இந்தியத் தொழில்நுட்பக் கல்வி கழகம் (61), கான்பூரின் இந்தியத் தொழில் நுட்பக் கல்வி கழகம் (66), மற்றும் டெல்லி பல்கலைக்கழகம் (85) ஆகியவை இடம் பெற்றுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்