QS உலகப் பல்கலைக்கழகத் தரவரிசையின் 17வது பதிப்பானது வெளியிடப் பட்டு உள்ளது.
இது குவாக்குரேலி சைமண்ட்ஸ் என்ற மையத்தினால் வருடாந்திரமாக வெளியிடப்படும் ஒரு பல்கலைக்கழகத் தரவரிசையாகும்.
இதற்கு முன்பு, இது டைம்ஸ் உயர் கல்வி QS உலகப் பல்கலைக்கழகத் தரவரிசை என்றழைக்கப்பட்டது.
சர்வதேசத் தரவரிசை வல்லுநர் குழுவின் ஒப்புதலைப் பெற்ற ஒரே சர்வதேசத் தரவரிசை இதுவாகும்.
இது உலகில் முன்னணியில் உள்ள 1000 பல்கலைக்கழகங்களைத் தரவரிசைப் படுத்துகின்றது.
இதில் முதல் 200 இடங்களில் இந்தியாவிலிருந்து 3 பல்கலைக்கழகங்கள் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளன. அவையாவன: மும்பையில் உள்ள இந்தியத் தொழில்நுட்ப நிறுவனம் (172), பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் நிறுவனம் (185), தில்லியில் உள்ள இந்தியத் தொழில்நுட்ப நிறுவனம் (193) ஆகியன ஆகும்.
மொத்தம், இந்தப் பட்டியலில் 21 இந்திய உயர் கல்வி நிறுவனங்கள் இடம் பிடித்து உள்ளன.