லண்டனில் அமைந்துள்ள குவாக்கரலி சைமண்ட்ஸ் (QS) என்ற நிறுவனமானது 2022 ஆம் ஆண்டிற்கான QS உலகப் பல்கலைக்கழகத் தரவரிசையை வெளியிட்டுள்ளது.
இந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ள சிறந்த 400 உலகப் பல்கலைக்கழகப் பட்டியலில் 8 இந்தியப் பல்கலைக் கழகங்களும் இடம் பெற்றுள்ளன.
முதல் 200 பல்கலைக் கழகங்களுள் மூன்று இந்தியப் பல்கலைக் கழகங்கள் இடம் பெற்றுள்ளன. அவை,
இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனம், மும்பை – 177,
இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனம், டெல்லி – 185,
இந்திய அறிவியல் கல்வி நிறுவனம், பெங்களூரு – 186
பெங்களூருவிலுள்ள இந்திய அறிவியல் கல்வி நிறுவனமானது “உலகின் முன்னணி (சிறந்த) ஆராய்ச்சி நிறுவனம்” என்று மதிப்பிடப் பட்டுள்ளது.
ஆராய்ச்சியின் தாக்கத்தை மதிப்பிடும் ஆசிரியர் ஆய்வறிக்கை என்ற குறியீட்டில் (Citations per Faculty indicator) இந்த நிறுவனம் நூற்றுக்கு நூறு என்ற மதிப்பினைப் பெற்றுள்ளது.
ஆராய்ச்சி அல்லது எந்தவொரு பரிமாணத்திலும் ஓர் இந்திய நிறுவனமானது முழு மதிப்பினைப் பெறுவது இதுவே முதல்முறையாகும்.
இந்தத் தரவரிசையில் அமெரிக்காவின் மாசசூசெட்ஸ் தொழில்நுட்பக் கல்வி நிறுவனமானது தொடர்ந்து 10 ஆண்டுகளாக முதலிடத்திலுள்ளது.
இதனையடுத்து இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமானது இரண்டாம் இடத்திலுள்ளது.
அமெரிக்காவின் ஸ்டான்போர்டு மற்றும் இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் ஆகிய பல்கலைக் கழகங்கள் மூன்றாம் இடத்தைப் பகிர்ந்து கொண்டு உள்ளன.