ஐஐடி-மும்பை கடந்த வருடத்திலிருந்து 17 இடங்கள் முன்னேறி, 162வது இடத்தை பிடித்து இந்தியாவின் முதல் தரமான நிறுவனமாக உருவெடுத்துள்ளது.
இந்நிறுவனம் டெல்லி ஐஐடி (172), பெங்களூர் இந்திய அறிவியல் நிறுவனம் (170) ஆகிய நிறுவனங்களைக் காட்டிலும் உயர்ந்த தரவரிசையில் உள்ளது.
தொடர்ந்து ஏழாவது ஆண்டாக, மாசாசூட்ஸ் தொழில்நுட்ப நிறுவனம் உலகின் சிறந்த பல்கலைக் கழகம் என்று முதல் இடத்தை தக்க வைத்து சாதனை புரிந்துள்ளது.
QS நிறுவனம் உலகின் 85 நாடுகளில் இருந்து சிறந்த 100 பல்கலைக் கழகங்களை மதிப்பிடுகின்றது. அமெரிக்கப் பல்கலைக் கழகங்கள் முதல் நான்கு இடங்களை தக்க வைத்து கொண்டுள்ளன. (ஸ்டான்போர்ட் 2வது இடம், ஹார்வார்ட் 3வது இடம், கால்டென் 4வது இடம்)
ஒட்டு மொத்த அளவில், தரவரிசைப்படுத்தப்பட்டுள்ள எட்டு ஐஐடிக்களில் ஆறு நிறுவனங்களும் இந்திய அறிவியல் நிறுவனமும் (Indian Institute of Science – IISc, Bengaluru) தங்கள் தரவரிசையை மேம்படுத்தி கொண்டுள்ளன. மற்ற இரு ஐஐடிக்கள் தங்கள் இடத்தை போன வருட அளவிலேயே (டெல்லி ஐஐடி மற்றும் மதராஸ் ஐஐடி) தக்க வைத்துக் கொண்டு உள்ளன.