TNPSC Thervupettagam

QS அமைப்பின் ஆசியத் தரவரிசை 2025

November 11 , 2024 17 days 100 0
  • இந்த 16வது அறிக்கையில் 25 வெவ்வேறு உயர்கல்வி அமைப்புகளைச் சேர்ந்த 984 பல்கலைக் கழகங்கள் இடம் பெற்றுள்ளன.
  • இதில் 193 இந்திய நிறுவனங்கள் இடம் பெற்றதுடன் சீனா (135) மற்றும் ஜப்பான் (115) ஆகியவற்றினை விஞ்சி இந்தப் பட்டியலில் அதிகப் பிரதிநிதித்துவம் பெற்ற நாடாக இந்தியா விளங்குகிறது.
  • இதில் பீகிங் பல்கலைக் கழகம் ஆனது ஆசிய அளவில் முதலிடத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது.
  • இதில் அதைத் தொடர்ந்து ஹாங்காங் பல்கலைக்கழகம் மற்றும் சிங்கப்பூர் தேசியப் பல்கலைக் கழகம் ஆகியவை உள்ளன.
  • இதில் டெல்லியின் இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகம் (44) ஆனது மும்பையின் இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகத்தினை (48) முந்தி இந்தியாவின் முன்னணி நிறுவனமாக மாறியுள்ளது.
  • சென்னையின் இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகம் ஆனது இப்பட்டியலில் 56வது இடத்தினைப் பெற்று இந்தியாவில் மூன்றாவது இடத்தில் உள்ளது.
  • முதல் 100 இடங்களில் ஆறு பல்கலைக்கழகங்கள் உட்பட இந்திய நிறுவனங்கள்  இடம் பெற்றுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்