TNPSC Thervupettagam

QS அமைப்பின் ஆசியப் பல்கலைக்கழகத் தரவரிசை 2024

November 12 , 2023 378 days 272 0
  • குவாக்கரெல்லி சைமண்ட்ஸ் (QS) அமைப்பின் ஆசியப் பல்கலைக்கழகத் தரவரிசை வெளியிடப்பட்டுள்ள நிலையில், இதில் இந்தியாவில் உள்ள 148 பல்கலைக்கழகங்கள் இடம் பெற்றுள்ளன.
  • ஆசியாவில் உள்ள 856 பல்கலைக்கழகங்களைக் கொண்ட ஒட்டு மொத்தப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
  • இப்பட்டியலில் 40வது இடத்தினைப் பெற்று மும்பையின் இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகம் ஆனது இந்தியாவில் முதலிடத்தைப் பிடித்தது.
  • அதைத் தொடர்ந்து டெல்லியின் இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகம் 46வது இடத்திலும், சென்னையின் இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகம் 53வது இடத்திலும் உள்ளன.
  • வேலூர் தொழில்நுட்பக் கழகம் (163), பாரதியார் பல்கலைக்கழகம் (171), அண்ணா பல்கலைக் கழகம் (179) ஆகிய தமிழகப் பல்கலைக் கழகங்களும் இப்பட்டியலில் இடம் பெற்றுள்ளன.
  • இந்தத் தரவரிசைப் பட்டியலில் 148 பல்கலைக் கழகங்கள் இடம் பெற்றதை அடுத்து, இந்தப் பட்டியலில் ஆசியாவிலேயே அதிகப் பல்கலைக் கழகங்கள் இடம் பெற்றுள்ள நாடாக இந்தியா திகழ்கிறது.
  • 133 பல்கலைக் கழகங்கள் இடம் பெற்றுள்ள சீனாவையும், 96 பல்கலைக்கழகங்கள் இடம் பெற்றுள்ள ஜப்பானையும் இந்தியா மிஞ்சியுள்ளது.
  • மும்பையின் இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகம் QS அமைப்பின் 2024 ஆம் ஆண்டு உலகப் பல்கலைக்கழக தரவரிசையில் 149வது இடத்தைப் பெற்றுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்