TNPSC Thervupettagam

QS அமைப்பின் உலகப் பல்கலைக்கழகத் தரவரிசை: நிலைத்தன்மை 2025

December 18 , 2024 31 days 101 0
  • QS அமைப்பின் 2025 ஆம் ஆண்டிற்கான நிலைத் தன்மை தரவரிசையில் மொத்தம் 78 இந்தியப் பல்கலைக்கழகங்கள் இடம் பெற்றுள்ளன.
  • இந்த ஆண்டு, இந்தத் தரவரிசையில் மொத்தம் 21 பல்கலைக் கழகங்கள் புதியதாக இடம் பெற்றுள்ளன.
  • இந்தியாவில் இந்த ஆண்டு டெல்லியின் இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகம் (உலக அளவில் 171வது இடம்) முதல் இடத்தைப் பெற்றுள்ளது.
  • கான்பூரின் இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகம் மற்றும் சென்னையின் இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகம் ஆகியவை இந்தியாவில் முறையே நான்காவது மற்றும் ஐந்தாவது இடத்தையும், உலக அளவில் முறையே 245வது மற்றும் 277வது இடத்தையும் பெற்றன.
  • உலகளவில், டொராண்டோ பல்கலைக்கழகமானது இந்த ஆண்டின் தரவரிசையில் முதல் இடத்தினைப் பெற்ற பல்கலைக்கழகம் ஆகும்.
  • அதைத் தொடர்ந்து சுவிட்சர்லாந்து நாட்டின் ETH சூரிச் பல்கலைக்கழகமும் சுவீடனில் உள்ள லுண்ட் என்ற பல்கலைக்கழகமும் மற்றும் பெர்க்லியில் உள்ள கலிபோர்னியா பல்கலைக் கழகமும் (UCB) ஆகியவை கூட்டாக மூன்றாவது இடத்திலும் உள்ளன.
  • ஆசியாவில், நான்கு நாடுகளைச் சேர்ந்த ஆறு பல்கலைக்கழகங்கள் இதன் முதல் 100 இடங்களில் இடம் பெற்றுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்