TNPSC Thervupettagam

QS அமைப்பின் உலகப் பல்கலைக்கழகத் தரவரிசை 2024

July 1 , 2023 384 days 262 0
  • மாசாசூசெட்ஸ் தொழில்நுட்பக் கல்வி நிறுவனமானது (MIT) தொடர்ந்து 12வது ஆண்டாக இந்த தரவரிசையில் முதலிடத்தில் உள்ளது.
  • கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் ஆனது இதில் இரண்டாவது இடத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது.
  • ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் ஆனது ஸ்டாண்ட்போர்ட் பல்கலைக் கழகத்தினைப் பின்னுக்குத் தள்ளி மூன்றாவது இடத்தினைப் பெற்றுள்ளது.
  • அமெரிக்கப் பல்கலைக்கழகங்கள் ஆனது QS அமைப்பின் தரவரிசையில் மீண்டும் முன்னணி பெற்று, முதல் 20 இடங்களில் பாதி இடங்களுக்கும் மேலான இடங்களைப் பெற்றுள்ளது.
  • கடந்த ஆண்டு 172வது இடத்தில் இருந்த மும்பையின் இந்தியத் தொழில்நுட்ப கல்விக் கழகமானது, இதில் தற்போது இந்திய அளவில் முதல் இடத்திலும், உலக அளவில் 149வது இடத்திலும் உள்ளது.
  • இதில் டெல்லியின் இந்தியத் தொழில்நுட்ப கல்விக் கழகமானது இந்த ஆண்டு 197வது இடத்திற்குத் தள்ளப் பட்டுள்ளது.
  • உலகளவில் முதல் 300 இடங்களில் இடம் பெற்ற பல்கலைக் கழகங்களின் பட்டியலில் மற்ற மூன்று இந்தியத் தொழில்நுட்ப கல்விக் கழகங்கள் இடம் பெற்றுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்