TNPSC Thervupettagam

QS அமைப்பின் பாட வாரியான உலகப் பல்கலைக்கழகத் தரவரிசை 2025

March 18 , 2025 13 days 63 0
  • மாசசூசெட்ஸ் தொழில்நுட்ப நிறுவனம் (MIT) ஆனது, QS அமைப்பின் 2025 ஆம் ஆண்டு உலகப் பல்கலைக்கழக தரவரிசையில் தொடர்ந்து 13வது ஆண்டாக முதலிடத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது.
  • இதில் லண்டன் இம்பீரியல் கல்லூரியானது இரண்டாவது இடத்தையும், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மற்றும் ஹார்வர்ட் பல்கலைக்கழகம் முறையே மூன்றாவது மற்றும் நான்காவது இடத்தையும் பிடித்துள்ளன.
  • கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் முதல் ஐந்து இடங்களில் ஒன்றாக இடம் பிடித்துள்ளது.
  • பொறியியல் - பெட்ரோலியம் என்ற பிரிவில் சென்னையின் இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகமானது உலகளவில் 31வது இடத்தில் உள்ளது.
  • பொறியியல் - கனிம மற்றும் சுரங்கப் பிரிவில் தன்பாத்தின் இந்திய சுரங்கக் கல்லூரி உலகில் 20வது இடத்தைப் பிடித்துள்ளது.
  • பொறியியல் - கனிம மற்றும் சுரங்கப் பிரிவில் மும்பையின் இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகமானது உலகளவில் 40வது இடத்தைப் பிடித்துள்ளது.
  • பொறியியல் - கனிம மற்றும் சுரங்கப் பிரிவில் காரக்பூரின் இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகமானது 45வது இடத்தைப் பிடித்துள்ளது.
  • பொறியியல் - மின்சாரம் மற்றும் மின்னணு துறையில் டெல்லியின் இந்தியத் தொழில் நுட்பக் கல்விக் கழகமானது 47வது இடத்தைப் பிடித்துள்ளது.
  • பொறியியல் - மின்சாரம் மற்றும் மின்னணு துறையில் மும்பையின் இந்தியத் தொழில் நுட்பக் கல்விக் கழகமானது உலகளவில் 50வது இடத்தில் உள்ளது.
  • வணிகம் மற்றும் மேலாண்மைப் படிப்புகளில் உலகளவில் அகமதாபாத்தின் இந்திய மேலாண்மைக் கல்வி நிறுவனமானது 27வது இடத்தைப் பிடித்துள்ளது.
  • வணிகம் மற்றும் மேலாண்மை படிப்புகளில் பெங்களூருவின் இந்திய மேலாண்மைக் கல்வி நிறுவனமானது 40வது இடத்தைப் பிடித்துள்ளது.
  • ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகமானது மேம்பாட்டுப் பிரிவு படிப்புகளில் 29வது இடத்தைப் பிடித்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்