QS அமைப்பின் பாடத்தின் அடிப்படையிலான உலகப் பல்கலைக்கழகத் தர வரிசை 2024
April 16 , 2024 221 days 301 0
2024 ஆம் ஆண்டிற்கான QS அமைப்பின் உலகப் பல்கலைக்கழகத் தரவரிசையில் இடம் பெற்றுள்ள 424 உள்ளீடுகளுடன் 69 இந்தியப் பல்கலைக்கழகங்களும் இதில் இடம் பெற்றுள்ளன.
இந்த ஆண்டிற்கான தரவரிசையில் அதிக அளவில் இடம் பெற்ற இந்தியப் பல்கலைக் கழகங்கள் டெல்லி பல்கலைக் கழகம் (30 உள்ளீடுகள்), மும்பையின் இந்தியத் தொழில் நுட்பக் கல்விக் கழகம் (28 உள்ளீடுகள்) மற்றும் காரக்பூரின் இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகம் (27 உள்ளீடுகள்) ஆகியனவாகும்.
சென்னையின் இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகத்தின் 22 பாட உள்ளீடுகளைக் இந்தத் தரவரிசை கொண்டிருந்தது.
இந்தியாவின் மிக உயரிய தரவரிசைப் பெற்ற பல்கலைக்கழகம் ஆனது ஜவஹர்லால் நேரு மேம்பாட்டு ஆய்வுகளுக்கான பல்கலைக்கழகம் (உலக அளவில் 20வது இடம், இந்தத் துறையில் ஒரு புதிய உள்ளீடு) ஆகும்.
சவீதா மருத்துவ மற்றும் தொழில்நுட்ப அறிவியல் கல்வி நிறுவனம் (நிகர்நிலை பல்கலைக் கழகம்) பல் மருத்துவத்தில் உலகளவில் 24வது இடத்தைப் பிடித்தது.
QS அமைப்பின் குறிகாட்டிகளில் ஒன்றான H குறியீட்டில் சரியான மதிப்பெண்ணை (100/100) பெற்ற ஒரே இந்தியப் பல்கலைக்கழகம் இதுவாகும்.