TNPSC Thervupettagam

QS உலகப் பல்கலைக்கழகங்கள் தரவரிசை

June 12 , 2020 1536 days 690 0
  • QS உலகப் பல்கலைக்கழகத் தரவரிசையின் 17வது பதிப்பானது வெளியிடப் பட்டு உள்ளது.
  • இது குவாக்குரேலி சைமண்ட்ஸ் என்ற மையத்தினால் வருடாந்திரமாக வெளியிடப்படும் ஒரு பல்கலைக்கழகத் தரவரிசையாகும்.
  • இதற்கு முன்பு, இது டைம்ஸ் உயர் கல்வி QS உலகப் பல்கலைக்கழகத் தரவரிசை என்றழைக்கப்பட்டது.
  • சர்வதேசத் தரவரிசை வல்லுநர் குழுவின் ஒப்புதலைப் பெற்ற ஒரே சர்வதேசத் தரவரிசை இதுவாகும்.
  • இது உலகில் முன்னணியில் உள்ள 1000 பல்கலைக்கழகங்களைத் தரவரிசைப் படுத்துகின்றது.
  • இதில் முதல் 200 இடங்களில் இந்தியாவிலிருந்து 3 பல்கலைக்கழகங்கள் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளன. அவையாவன: மும்பையில் உள்ள இந்தியத் தொழில்நுட்ப நிறுவனம் (172), பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் நிறுவனம் (185), தில்லியில் உள்ள இந்தியத் தொழில்நுட்ப நிறுவனம் (193) ஆகியன ஆகும்.
  • மொத்தம், இந்தப் பட்டியலில் 21 இந்திய உயர் கல்வி நிறுவனங்கள் இடம் பிடித்து உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்