TNPSC Thervupettagam

QS உலகப் பல்கலைக்கழகத் தரவரிசை 2022

June 12 , 2021 1262 days 610 0
  • லண்டனில் அமைந்துள்ள குவாக்கரலி சைமண்ட்ஸ் (QS) என்ற நிறுவனமானது 2022 ஆம் ஆண்டிற்கான QS உலகப் பல்கலைக்கழகத் தரவரிசையை வெளியிட்டுள்ளது.
  • இந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ள சிறந்த 400 உலகப் பல்கலைக்கழகப் பட்டியலில் 8 இந்தியப் பல்கலைக் கழகங்களும் இடம் பெற்றுள்ளன.
  • முதல் 200 பல்கலைக் கழகங்களுள் மூன்று இந்தியப் பல்கலைக் கழகங்கள் இடம் பெற்றுள்ளன. அவை,
    • இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனம், மும்பை – 177,
    • இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனம், டெல்லி185,
    • இந்திய அறிவியல் கல்வி நிறுவனம், பெங்களூரு – 186
  • பெங்களூருவிலுள்ள இந்திய அறிவியல் கல்வி நிறுவனமானதுஉலகின் முன்னணி (சிறந்த) ஆராய்ச்சி நிறுவனம்என்று மதிப்பிடப் பட்டுள்ளது.
  • ஆராய்ச்சியின் தாக்கத்தை மதிப்பிடும் ஆசிரியர் ஆய்வறிக்கை என்ற குறியீட்டில் (Citations per Faculty indicator) இந்த நிறுவனம் நூற்றுக்கு நூறு என்ற மதிப்பினைப் பெற்றுள்ளது.
  • ஆராய்ச்சி அல்லது எந்தவொரு பரிமாணத்திலும் ஓர் இந்திய நிறுவனமானது முழு மதிப்பினைப் பெறுவது இதுவே முதல்முறையாகும்.
  • இந்தத் தரவரிசையில் அமெரிக்காவின் மாசசூசெட்ஸ் தொழில்நுட்பக் கல்வி நிறுவனமானது தொடர்ந்து 10 ஆண்டுகளாக முதலிடத்திலுள்ளது.
  • இதனையடுத்து இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமானது இரண்டாம் இடத்திலுள்ளது.
  • அமெரிக்காவின் ஸ்டான்போர்டு மற்றும் இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் ஆகிய பல்கலைக் கழகங்கள் மூன்றாம் இடத்தைப் பகிர்ந்து கொண்டு உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்