சிறப்பு வளர்ச்சி நிதிநிலை ஒதுக்கீடுகளை (special development budget allocations) மதிப்பீடு (Evaluate) செய்வதற்காகவும், அவற்றை அளவீடு (quantify) செய்வதற்காகவும், பழங்குடியின மேம்பாட்டின் மீது அவற்றினுடைய தாக்கங்களை மதிப்பிடுவதற்காகவும் “QUEST” எனும் மையத்தை மகாராஷ்டிரா மாநில அரசு அமைத்துள்ளது.
நீடித்த மாற்றத்திற்கான தர மதிப்பீடு மையம் என்பதே (Quality Evaluation for Sustainable Transformation centre) QUEST என்பதன் விரிவாக்கமாகும்..
பழங்குடியினரின் மேம்பாட்டிற்காக ஒதுக்கீடு செய்யப்படும் ஒவ்வொரு ரூபாயும் கணக்கிடப்படுவதோடு மட்டுமல்லாமல் ஒதுக்கீடு தொகைகளினால் மேற்கொள்ளப்படுகின்ற திட்டங்களின் மூலம் பழங்குடியின மக்களின் வாழ்வில் ஏற்படுகின்ற மேம்பாடும் அளவீடு செய்யப்படுகின்றது என்பதை உறுதி செய்வதற்காக மகாராஷ்டிரா மாநிலத்தினால் தொடங்கப்பட்டுள்ள முதல் தொடக்கம் நாட்டில் இதுவே ஆகும்.