TNPSC Thervupettagam
February 18 , 2025 4 days 38 0
  • Su-30MKI விமானத்தின் இறக்கைகளின் கீழ் பொருத்தப்பட்ட R-77 வான்வழி தாக்குதல் எறிகணைக்கு மாற்றாக R-37M எறிகணையைப் பொறுத்துவதற்கு ரஷ்யாவானது இந்தியாவிற்கு வாய்ப்பளித்துள்ளது.
  • R-37M ஆனது அதன் NATO அறிக்கையிடல் பெயரான AA-13 Axehead என்றும் அழைக்கப் படுகிறது.
  • இது ரஷ்யாவால் உருவாக்கப்பட்ட மிக நீண்ட தூர தாக்குதல் வரம்புடைய வான்வழி தாக்குதல் எறிகணையாகும்.
  • R-77 ஆனது அதிகபட்சமாக சுமார் 100 கிலோமீட்டர் தூரம் தாக்கும் திறன் கொண்டது என்பதோடு இது 300 முதல் 400 கிலோமீட்டர் என்ற வரையிலான R-37M எறிகணையின் தாக்குதல் வரம்பை விட கணிசமாகக் குறைவாகும்.
  • இதன் வேகத்தைப் பொறுத்தவரையில், R-77 சுமார் மேக் 4-5 வேகம் வரை எட்டும் திறன் கொண்ட அதே நேரத்தில் R-37M மேக் 6 வேகத்தில் இயங்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்